Friday, September 13, 2013

இந்தியன் என்று சொன்னால் அவ்வளவு கேவலமா?

Photo: பல தடவைகள் கீழ்கண்ட படமும், அதிலுள்ள தகவலும் FACEBOOK-ல் பகிரப்பட்டது. 

யாரும் அதிலுள்ள கருத்துக்களை (?) ஆய்வு செய்து பகிர்ந்த மாதிரி தெரியவில்லை.

சரி நாம சும்மாதானே இருக்கிறோம். ஆய்வு செய்துதான் பார்க்கலாமே... ஏனென்றால், மற்றவர்களுக்கு LIKE-செய்யவும், SHARE-செய்யவும் தானே நேரமிருக்கிறது...

அமெரிக்கன் சொல்வது:
If you attack our single soldier, we declare war and attack your 
country.

இஸ்ரேலியன் சொல்வது:
If you attack us, we will take your country out from the map.

இந்தியன் சொல்வது:
If you attack our country, we stop playing cricket with you.

சராசரி மனிதனாக (அதாங்க நம் மூளையினை உபயோகப்படுத்தாமலும், 
காங்கிரஸ் அரசின் மீதுள்ள கோபத்தினாலும்) சிந்தித்தால் அடுத்த கணம் 
நம் விரல்கள் தன்னிச்சையாக ஒரு LIKE கொடுக்கும். பிறகு நம் நண்பர்கள் குழுவிடம் SHARE செய்யும். நம் நண்பர்களும் LIKE கொடுப்பார்கள். நாம் செய்த அதே வேலையையே செய்வார்கள்.  மேலும் சிலர் நல்ல பின்னுாட்டத்தையும் (காங்கிரஸை சபித்தும் அல்லது திட்டியும்) இடுவார்கள். 

பாருங்க மறந்துட்டேன். சிலர் BJP-க்கு வக்காலத்து வாங்கியும் பின்னுாட்டம் இடுவார்கள்.

என்ன பிழைப்பு இது என்று தெரியவில்லை. என்னடா இவன் வளவளன்னு ஏதோ சொல்றான். ஸ்..ஸ்..ப்பா... இப்பவே கண்ண கட்டுதே என்று தானே நினைக்குறீங்க?

சரி பாஸ் TOPIC-க்கு வருவோம்.

அமெரிக்கன் யாரை பார்த்து மேற்கண்ட வாசகத்தை கூறியிருக்க முடியும்? 

ஒரு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா இன்னும் பல நாடுகள். 
ஏனென்றால் அவர்களிடம் தான் அணு ஆயுதம் இல்லையே?  
ஹைய்யா.. ஜாலி... அப்பத்தானே திருப்பி அடிக்க முடியாது?

"நாம் தானே அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்கிறோம். 
பிறகு இந்த வாய்ச்சவடால் மற்றும் நம்மிடம் EXPIRY-ஆகி கிடக்கும் 
அணு குண்டுகளை களமிறக்கி அவர்களின் மீது சோதிக்காவிட்டால் நம்மை வல்லரசு என்று எவன் ஏற்றுக்கொள்வான் பாஸ்?"

வட கொரியா அணு ஆயுதம் தயாரிக்கிறது. உலகத்தின் நன்மைக்காக 
அதை தடுத்து நிறுத்துவோம். அந்நாட்டின் மீது படையெடுப்போம் என்று 
வாய்ச்சவடால் விட்ட நாம் (ஒரு மாதத்திற்கு அது தான் தலைப்புச்செய்தியே) ஏன் பின்வாங்கினோம்?

விடுங்க பாஸ் அதெல்லாம் பிறகு WIKILEAKS மூலம் தெரிந்து கொள்ளுங்க.

சரி ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை கூறி, 

"படையெடுப்போம். அணு ஆயுதம் தாயாரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்" 

என்று மீண்டும் வாய்ச்சவடால் விட்ட நாம் (அடுத்தவனுக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததுதான் மிச்சம். எனக்கு இலாபம் தான்) பின் ஏன் பின்வாங்கினோம்? ஈரான் பெட்ரோலை வாங்காதீர்கள் நண்பர்களே என்று அனைவரிடமும் ஏன் கெஞ்சினோம்? 

போங்க பாஸ் இது கூட நான் தான் சொல்லனுமா? இளிச்சவாயன் 
சிக்கிட்டான்னு நினெச்சேன். ஆனா அவன் இளிச்சவாயன் இல்ல
பாஸ். பக்கா ரவுடி. 1-5 அணு குண்டு வச்சிருக்கானாம். 

ஸ்..ஸ்..ப்பா... இப்பவே கண்ண கட்டுதே? எஸ்கேப்....

அடுத்து இஸ்ரேல்காரன் சொன்ன வாக்கியத்துக்கு வருவோம். 

பாஸ் அது நான் சொல்லவே இல்ல. ஈரான்காரன் என்னைப்பார்த்து சொன்னதை நான் சொன்னதா ட்விஸ்ட் (TWIST) செய்துட்டாங்க...

என் மேல மக்களுக்கு ஏன் இந்த கொலவெறின்னு தெரியல. ஒரு ஆயுதமும் இல்லாத நாட்ட மிரட்டித்தான எனக்கு பழக்கமுங்க.

பாருங்க.. லெபனானைச்சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுதங்களை குடுக்குறது ஈரான்னு தெரியும். ஆனாலும் எனக்கு தெரியுற மாதிரி காட்டிக்கிறேனா?

தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா வம்பு பாஸ். அப்புறம் ஈரான் மேல ஏண்டா கைய வைக்கலைன்னு நீங்க கேப்பீங்களே? 

கைய வைக்கனும்னு நெனச்சாலே நீ உலக வரைபடத்திலேயே இருக்க மாட்டன்னு வேற ஈரான்காரன் சொல்லிபுட்டான். எதுக்கு வம்பு பாஸ்?

கிரேட் எஸ்கேப்...

அடுத்து நம்ம இந்தியாவிற்கு வருவோம் பாஸ்.  அப்பா... வந்துட்டேன் 
நம்ம நாட்டிற்கு...

”வந்தேண்டா பால்காரன்... பசு மாட்ட பத்தி பாடப்போறேன்...”
 
SORRY பாஸ் கையிலிருந்த IPOD ஆன் ஆயிருச்சு....

நாமதான் இங்க உலகமகா ட்விஸ்டை செஞ்சிருக்கோமே பாஸ். 
என்ன யோசிக்கிறீங்க?

நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர்களுடன் நடக்கவிருந்த கிரிக்கெட்டை தடுத்தது யாரு பாஸ்? 
காங்கிரஸா? பாரதீய ஜனதாவா? அல்லது கம்யூனிஸ்டா?

நாமதான் அறிக்கை விட்டவர்களையெல்லாம் மறந்துடுவோமே? 
பல செய்தித்தாள்களில் சுற்றிச்சுற்றி வந்த செய்தியாச்சே பாஸ். 
அதுதானே பாஸ் நம்ம இந்தியாவின் சாபக்கேடு...

கூகுளிடம் சரணடைந்து தேடிப்பாருங்க பாஸ். விடை கிடைக்கும்.

சாம்பிளு (Sample) பாஸ் சாம்பிளு...

http://articles.economictimes.indiatimes.com/2012-12-17/news/35868786_1_indo-pak-cricket-series-rehman-malik-sushilkumar-shinde

இனிமேலாவது SHARE-செய்யும் முன் மூளையை உபயோகிப்போம் என்று சபதமெடுப்போம் பாஸ்....

பல தடவைகள் மேற்கண்ட படமும், அதிலுள்ள தகவலும் FACEBOOK-ல் பகிரப்பட்டது. 

யாரும் அதிலுள்ள கருத்துக்களை (?) ஆய்வு செய்து பகிர்ந்த மாதிரி தெரியவில்லை.

சரி நாம சும்மாதானே இருக்கிறோம். ஆய்வு செய்துதான் பார்க்கலாமே... ஏனென்றால், மற்றவர்களுக்கு LIKE-செய்யவும், SHARE-செய்யவும் தானே நேரமிருக்கிறது...

அமெரிக்கன் சொல்வது:
If you attack our single soldier, we declare war and attack your 
country.

இஸ்ரேலியன் சொல்வது:
If you attack us, we will take your country out from the map.

இந்தியன் சொல்வது:
If you attack our country, we stop playing cricket with you.

சராசரி மனிதனாக (அதாங்க நம் மூளையினை உபயோகப்படுத்தாமலும், காங்கிரஸ் அரசின் மீதுள்ள கோபத்தினாலும்) சிந்தித்தால் அடுத்த கணம் நம் விரல்கள் தன்னிச்சையாக ஒரு LIKE கொடுக்கும். பிறகு நம் நண்பர்கள் குழுவிடம் SHARE செய்யும். நம் நண்பர்களும் LIKE கொடுப்பார்கள். நாம் செய்த அதே வேலையையே செய்வார்கள். மேலும் சிலர் நல்ல பின்னுாட்டத்தையும் (காங்கிரஸை சபித்தும் அல்லது திட்டியும்) இடுவார்கள். 

பாருங்க மறந்துட்டேன். சிலர் BJP-க்கு வக்காலத்து வாங்கியும் பின்னுாட்டம் இடுவார்கள்.

என்ன பிழைப்பு இது என்று தெரியவில்லை. என்னடா இவன் வளவளன்னு ஏதோ சொல்றான். ஸ்..ஸ்..ப்பா... இப்பவே கண்ண கட்டுதே என்று தானே நினைக்குறீங்க?

சரி பாஸ் TOPIC-க்கு வருவோம்.

அமெரிக்கன் யாரை பார்த்து மேற்கண்ட வாசகத்தை கூறியிருக்க முடியும்? 

ஒரு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா இன்னும் பல நாடுகள். ஏனென்றால் அவர்களிடம் தான் அணு ஆயுதம் இல்லையே? ஹைய்யா.. ஜாலி... அப்பத்தானே திருப்பி அடிக்க முடியாது?

"நாம் தானே அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்கிறோம். பிறகு இந்த வாய்ச்சவடால் மற்றும் நம்மிடம் EXPIRY-ஆகி கிடக்கும் அணு குண்டுகளை களமிறக்கி அவர்களின் மீது சோதிக்காவிட்டால் நம்மை வல்லரசு என்று எவன் ஏற்றுக்கொள்வான் பாஸ்?"

வட கொரியா அணு ஆயுதம் தயாரிக்கிறது. உலகத்தின் நன்மைக்காக அதை தடுத்து நிறுத்துவோம். அந்நாட்டின் மீது படையெடுப்போம் என்று வாய்ச்சவடால் விட்ட நாம் (ஒரு மாதத்திற்கு அது தான் தலைப்புச்செய்தியே) ஏன் பின்வாங்கினோம்?

விடுங்க பாஸ் அதெல்லாம் பிறகு WIKILEAKS மூலம் தெரிந்து கொள்ளுங்க.

சரி ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை கூறி, 

"படையெடுப்போம். அணு ஆயுதம் தாயாரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்" 

என்று மீண்டும் வாய்ச்சவடால் விட்ட நாம் (அடுத்தவனுக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததுதான் மிச்சம். எனக்கு இலாபம் தான்) பின் ஏன் பின்வாங்கினோம்? ஈரான் பெட்ரோலை வாங்காதீர்கள் நண்பர்களே என்று அனைவரிடமும் ஏன் கெஞ்சினோம்? 

போங்க பாஸ் இது கூட நான் தான் சொல்லனுமா? இளிச்சவாயன் சிக்கிட்டான்னு நினெச்சேன். ஆனா அவன் இளிச்சவாயன் இல்ல பாஸ். பக்கா ரவுடி. 1-5 அணு குண்டு வச்சிருக்கானாம். 

ஸ்..ஸ்..ப்பா... இப்பவே கண்ண கட்டுதே? எஸ்கேப்....

அடுத்து இஸ்ரேல்காரன் சொன்ன வாக்கியத்துக்கு வருவோம். 

பாஸ் அது நான் சொல்லவே இல்ல. ஈரான்காரன் என்னைப்பார்த்து சொன்னதை நான் சொன்னதா ட்விஸ்ட் (TWIST) செய்துட்டாங்க...

என் மேல மக்களுக்கு ஏன் இந்த கொலவெறின்னு தெரியல. ஒரு ஆயுதமும் இல்லாத நாட்ட மிரட்டித்தான எனக்கு பழக்கமுங்க.

பாருங்க.. லெபனானைச்சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுதங்களை குடுக்குறது ஈரான்னு தெரியும். ஆனாலும் எனக்கு தெரியுற மாதிரி காட்டிக்கிறேனா?

தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா வம்பு பாஸ். அப்புறம் ஈரான் மேல ஏண்டா கைய வைக்கலைன்னு நீங்க கேப்பீங்களே? 

கைய வைக்கனும்னு நெனச்சாலே நீ உலக வரைபடத்திலேயே இருக்க மாட்டன்னு வேற ஈரான்காரன் சொல்லிபுட்டான். எதுக்கு வம்பு பாஸ்?

கிரேட் எஸ்கேப்...

அடுத்து நம்ம இந்தியாவிற்கு வருவோம் பாஸ். அப்பா... வந்துட்டேன் நம்ம நாட்டிற்கு...

”வந்தேண்டா பால்காரன்... பசு மாட்ட பத்தி பாடப்போறேன்...”

SORRY பாஸ் கையிலிருந்த IPOD ஆன் ஆயிருச்சு....

நாமதான் இங்க உலகமகா ட்விஸ்டை செஞ்சிருக்கோமே பாஸ். என்ன யோசிக்கிறீங்க?

நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர்களுடன் நடக்கவிருந்த கிரிக்கெட்டை தடுத்தது யாரு பாஸ்? காங்கிரஸா? பாரதீய ஜனதாவா? அல்லது கம்யூனிஸ்டா?

நாமதான் அறிக்கை விட்டவர்களையெல்லாம் மறந்துடுவோமே? பல செய்தித்தாள்களில் சுற்றிச்சுற்றி வந்த செய்தியாச்சே பாஸ். அதுதானே பாஸ் நம்ம இந்தியாவின் சாபக்கேடு...

கூகுளிடம் சரணடைந்து தேடிப்பாருங்க பாஸ். விடை கிடைக்கும்.

சாம்பிளு (Sample) பாஸ் சாம்பிளு...

http://articles.economictimes.indiatimes.com/2012-12-17/news/35868786_1_indo-pak-cricket-series-rehman-malik-sushilkumar-shinde

இனிமேலாவது SHARE-செய்யும் முன் மூளையை உபயோகிப்போம் என்று சபதமெடுப்போம் பாஸ்....

No comments:

Post a Comment