இன்று நாம் "நமது பிரபஞ்சம் (Universe) விரிவடைந்து கொண்டே செல்கிறது" என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையினை சற்று அலசுவோம்.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கீழ்கண்டவாறு கூறுகிறான்.
மேலும் நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம், நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
With power did We construct the heaven. Verily, We are Able to extend the vastness of space thereof.
அல்குர்ஆன் (51: 47)
சகோதரர்களே!!! இந்த வசனத்தின் மூலம் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பற்றியும் மேலும் இந்த பிரபஞ்சமானது அவனுடைய வல்லமையினைக் கொண்டே விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் கூறுகின்றான். 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதராவது (எந்தவித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில்) இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையினை அறிந்து சொல்ல முடியுமா? இந்த ஒரு வசனமே போதுமல்லவா நமது திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்று நிரூபிக்க.
நமக்கெல்லாம் நமது வகுப்புக்களில் படித்துக் கொடுக்கப்பட்டபடி, இந்த பிரபஞ்சமானது நிலையானது (Constant Matter) என்றும் மேலும் இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா கோள்களும், நட்சத்திரங்களும் மற்ற ஏனையவைகளும் தங்களுக்குள் ஒன்றையொன்று மீறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரியும்.
ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் இதற்கு மாற்றமாக இருக்கின்றன. இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் (Big Bang) இருந்ததென்றும், அது அன்றிலிருந்து ஒரு சீரான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தற்போதைய நவீன கருவிகளின் உதவியுடன் வானியல் ஆராய்ச்சியாளர்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விண்ணியல் அறிஞர் (Astro Physicist) அலெக்ஸாண்டர் ஃபிரைட்மென் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த அகிலவியல் அறிஞர் (Cosmologist) ஜார்ஜஸ் லெமடைர் இருவரும் ஒரு கோட்பாட்டின் மூலம் இந்த பிரபஞ்சமானது நிலையானது இல்லை என்றும், அது விரிவடைந்து கொண்டே செல்வதாகவும் தங்களது கருத்தை முன் வைத்தனர். ஆனால் அதை அவர்களால் கோட்பாட்டின் படி நிரூபிக்க முடிந்ததே தவிர ஆதாரத்தை தர முடியவில்லை.
பின்னர் அந்த கோட்பாடு, 1929-ம் ஆண்டில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது ஹப்புள் (Hubble) டெலஸ்கோப் மூலம். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த நவீன டெலஸ்கோப். இந்த டெலஸ்கோப்பின் மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சமானது நிலையானது இல்லையென்றும் அது ஒரு சீரான வேகத்தில் ஒன்றையொன்று விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறது (விரிந்து கொண்டிருக்கிறது) என்றும் பல வகையான கண்காணிப்பு ஆய்வுகளின் (observations carried over the years) மூலம் கண்டறிந்துள்ளனர்.
நம்முடைய பால்வெளி மண்டலமும் (Milkyway Galaxy), நட்சத்திர மண்டலமும் (Star Galaxy) கூட ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பால்வெளி மண்டலத்தில் இருக்கும் சூரியன் அதை சுற்றிவரும் அனைத்துக் கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், இதை ஒரு பலூனை வைத்து ஒப்பிடுகிறார்கள். பலூனானது ஊத ஊத விரிவடைந்துகொண்டே செல்கிறது அல்லவா அப்படி நமது பிரபஞ்சமும் விரிவிடைந்து கொண்டே செல்வதாக கூறுகிறார்கள். இறைவன் "நிறுத்து" என்று சொல்லும் வரை அந்த பயணம் தொடரும்.
பலூனை ஊதுவதை நிறுத்தியவுடன் எப்படி அது திரும்ப தனது பழைய நிலையை அடைகிறதோ அப்படி ஒரு நாள் பிரபஞ்சத்திற்கும் நிகழும். விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சமானது ஒரு நாள் நின்று (இறைவனின் கட்டளைப்படி) திரும்ப சுருங்க ஆரம்பிக்கும். அதுதான் யுக முடிவுநாள்.
மேற்கண்ட உதாரணத்தை விட இறைவன் தன்னுடைய திருமறையிலே ஒரு வசனத்தின் மூலம் கூறுவது நாம் மேலும் விளங்கிக் கொள்ள விசாலமானது.
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
Allah knows what every female bears, and by how much the wombs fall short (of their time or number) or exceed. Everything with Him is in (due) proportion.
அல்குர்ஆன் (13: 8)
அல்குர்ஆன் (13: 8)
அனைத்தையும் அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அவன் (யாவரையும்) மிகைத்தவன்.
No comments:
Post a Comment